எந்தன் கனவுகளை
கலைத்துவிட்டுச் செல்வதில்
அப்படியென்ன சந்தோசம் உனக்கு...
கனவோடுதான் வாழ்ந்து கொண்டிருந்தேன்
வந்தவள்
பேசியிருக்க வேண்டும் - இல்லை
பேச தைரியப்படுதியிருக்க வேண்டும்...
எந்தன் எழுத்துக்களின்
ஆதியும் அந்தமும் நீதான் - இது
உனக்கும் தெரிந்திருக்க வேண்டும்
ஆகையால்தானோ - என்னை
எழுத வைத்தே பார்த்துக்கொள்கிறாய்...
ஏனடி அப்படியொரு பார்வை பார்த்துப்போகிறாய்
நீ பார்ப்பதேனோ உந்தன் விருப்பம்
சிதறிப் போவது நானல்லவா...
பார்வையினால் பாறைகளையும்
கரைத்துப் பார்க்கிறாயடி...
என்னை வெட்கம் கொள்ளச் செய்யும்
உந்தன் பார்வை...
உன்னை நானும்
என்னை நீயும்
இடம் மாற்றிக் கொண்டதாலோ என்னவோ - நீ
வார்த்தைகளை மட்டும் உதிர்ப்பதே இல்லை...
கடவுளின் வரத்திற்காய் ஏங்கும்
யாசகனாய்
உந்தன் வார்த்தைகளுக்காய்...
ஈர்ப்பு சக்தியென்று படித்ததுண்டு - நேரில்
கண்டுகொண்டேன் உன் பார்வையினால்...
காதல் சுகமானது - எவனோ
சொல்லிவிட்டுச் சென்றது...
உந்தன் ஒற்றைச் சொல்லிற்காய்
ஏங்கும் எனக்குத்தான் தெரியும்
காதல் நரக வேதனையடி...
Friday, July 10, 2009
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment