ஏதோ ஒரு மழைக்கால நாளில்
முதன் முதலாய்
உன்னுடன் நான்
தனிமையிலிருந்த ஞாபகம்...
நீ ஏதேதோ பேசிக்கொண்டிருந்தாய்
என்னால் மட்டும் ...
ஏனோ பேச முடியவில்லை
ஏனடி இப்படி பேசிக்கொண்டேயிருக்கிறாய்
கேட்கவும் தோன்றிற்று எனக்கு
ஏதோ இனிமையில் கேட்க மறந்து
மயங்கிப் போயிருந்தேன் நான்...
மழைச்சாரலுக்கு இதமாய்
தேநீர் ஒன்று கேட்டேன்
அந்நேரத்தில்
நீ கொடுத்த
அந்த கருப்பு டீக்கு
இதுவரை இணையேதுமில்லையடி...
ஏனோ நீ திடுமென புள்ளிமானாய் ஓடினாய்
மழையில் நனையாதே
சொல்ல வாயெடுத்த ஞாபகம்...
வீட்டு தோட்ட செடியிலிருந்து
பூவொன்று பறித்து வந்தாய்
ஒற்றைக்கையில் பூவுடன்
நீ திரும்பி நின்றது
வெட்கத்தினால் இல்லைதானே!
நீ பறித்த அந்த பூவை
எந்தன் கைகளினால்
எந்தன் பாவையின் கூந்தலில்...
ஈரமான அந்த கூந்தலை
வருடிக்கொண்டேயிருக்கத்தான் ஆசை
பேசவே யோசித்த என்னை - நீ
என்ன நினைப்பாயோ...
மாற்றாய் நீயோ
கூந்தலை முன்னே விட்டு
என்னை இறுக அணைத்து அளித்த
அந்த முத்த மழைக்காய்
உயிரையும் விட்டு விடலாம்...
எப்போதும்
எந்தன் தனிமைகளிலெல்லாம்
கண்முன்னே வந்து போகும்
உந்தன் முத்த மழை...

