Monday, July 13, 2009

ஏன் இப்படியாகிப்போனோம்

ஏன் இப்படி ஏற்ற இறக்கங்கள்
எந்தன் மக்களிடையே...
சகோதரர்கள் அங்கே காரண காரியம்
ஏதுமின்றி
சிறைப்படுகின்றனர்...
சகோதரிகள் பிறந்த பாவமா
கற்பழிக்கப்படுகின்றனர்...
இங்கே நாம் ராமணா ராவணனா
கண்ணகியா சீதையா
பட்டிமண்டபங்கள் நடத்திக்கொண்டிருக்கிறோம்...
ஏன் நம் இரத்தங்களின் கஷ்டங்கள்
நமக்கே விளங்காமல் போனது...
விளங்கவில்லையா - இல்லை
வீணே போகவிட்டோமா...
அவர்களின் சயனைடுகளுக்கு
நமது அதர பானங்களா....
உண்மையில் அவர்கள் கவரிமான்கள் - நாம்
வெறும் கவரிகள்தான்....
இரங்கல் தீர்மானமென்று
ஏற்ற இறக்கத்துடன் கவியும் காவியமும் தீட்டும்
நம்மோர்
ஏன் அவர்களின் வாழ்வியலுக்கு
வழி காணவிளையவில்லை...
உண்மையில் தமிழர்கள்தானா நாம் - என்னையும்
சேர்த்துதான் நொந்துகொள்கிறேன்...
நான் என் கையாலாகா தனத்திற்காய்
உங்களிடம் மண்டியிடுகிறேன்
என்னை மன்னிதுவிடுங்களடா
எந்தன் செல்வங்களே...
ஏன் இப்படியாகிப்போனோம்......

No comments:

Post a Comment