Sunday, June 10, 2012
இரட்டை வாழ்க்கை
காலம் எவ்வளவு கொடுமையானது
காதல் கொடுமையின் கொடுமை
மணமாகி மகனாகியும்
மறக்க முடியவில்லைதான் உன்னை
மன்னவனிடமும் கூறவில்லை
கூறினால் குறைதான் வாழ்வு
உன்னுடன் வாழ்ந்த
அந்த பசுமையான நாட்கள்
என்னுள் பச்சை பசேலாய்
உன்னை நான்
நினைக்காமல் இருக்கத்தான் பார்க்கின்றேன்
தோற்றுத்தான் போகின்றேன்
நினைவெல்லாம் நீயாகிப்போனதால்
உன் முதல் மாத சம்பளத்தில்
உனக்குள்ளிருந்த எனக்கு நீ அளித்த
அந்த மோதிரம் மட்டும் இன்னுமென் விரலில்...
நினைவில் நீ
நிசத்தில் அவன்
வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் நான்...
Saturday, April 7, 2012
இதற்கு பெயர் காதல் என்றால்
நீ
எங்கோ பார்த்து
எதற்காகவோ சிரித்துபோவதை
என்னுடன் சிரிப்பதாய்
சிலிர்க்கின்றேன்...
இதற்கு பெயர் காதல் என்றால்
ஆம்
நிச்சயம் சொல்வேன்
சத்தியம் செய்வேன்
நான் உன்னை காதலிக்கின்றேன்...
நீ
ஏதோ ஒரு குழந்தைக்கு
முத்தமிட்டு செல்வதால்
என் உதடு வறட்சியிழப்பதாய்
உணர்கின்றேன்...
இதற்கு பெயர் காதல் என்றால்
ஆம்
நிச்சயம் சொல்வேன்
சத்தியம் செய்வேன்
நான் உன்னை காதலிக்கின்றேன்...
நீ
பேசாத வார்த்தைகளுக்கும்
அர்த்தம் புரிந்து கொண்டதாய்
சிரித்துகொள்கின்றேன்...
இதற்கு பெயர் காதல் என்றால்
ஆம்
நிச்சயம் சொல்வேன்
சத்தியம் செய்வேன்
நான் உன்னை காதலிக்கின்றேன்...
நீ
என்னை கடந்து போகும்
ஒரு நொடிக்காய்
மணிக்கணக்கில் காத்து நிற்கின்றேன்...
இதற்கு பெயர் காதல் என்றால்
ஆம்
நிச்சயம் சொல்வேன்
சத்தியம் செய்வேன்
நான் உன்னை காதலிக்கின்றேன்...
எங்கோ பார்த்து
எதற்காகவோ சிரித்துபோவதை
என்னுடன் சிரிப்பதாய்
சிலிர்க்கின்றேன்...
இதற்கு பெயர் காதல் என்றால்
ஆம்
நிச்சயம் சொல்வேன்
சத்தியம் செய்வேன்
நான் உன்னை காதலிக்கின்றேன்...
நீ
ஏதோ ஒரு குழந்தைக்கு
முத்தமிட்டு செல்வதால்
என் உதடு வறட்சியிழப்பதாய்
உணர்கின்றேன்...
இதற்கு பெயர் காதல் என்றால்
ஆம்
நிச்சயம் சொல்வேன்
சத்தியம் செய்வேன்
நான் உன்னை காதலிக்கின்றேன்...
நீ
பேசாத வார்த்தைகளுக்கும்
அர்த்தம் புரிந்து கொண்டதாய்
சிரித்துகொள்கின்றேன்...
இதற்கு பெயர் காதல் என்றால்
ஆம்
நிச்சயம் சொல்வேன்
சத்தியம் செய்வேன்
நான் உன்னை காதலிக்கின்றேன்...
நீ
என்னை கடந்து போகும்
ஒரு நொடிக்காய்
மணிக்கணக்கில் காத்து நிற்கின்றேன்...
இதற்கு பெயர் காதல் என்றால்
ஆம்
நிச்சயம் சொல்வேன்
சத்தியம் செய்வேன்
நான் உன்னை காதலிக்கின்றேன்...
Sunday, March 25, 2012
Subscribe to:
Posts (Atom)

