காலம் எவ்வளவு கொடுமையானது
காதல் கொடுமையின் கொடுமை
மணமாகி மகனாகியும்
மறக்க முடியவில்லைதான் உன்னை
மன்னவனிடமும் கூறவில்லை
கூறினால் குறைதான் வாழ்வு
உன்னுடன் வாழ்ந்த
அந்த பசுமையான நாட்கள்
என்னுள் பச்சை பசேலாய்
உன்னை நான்
நினைக்காமல் இருக்கத்தான் பார்க்கின்றேன்
தோற்றுத்தான் போகின்றேன்
நினைவெல்லாம் நீயாகிப்போனதால்
உன் முதல் மாத சம்பளத்தில்
உனக்குள்ளிருந்த எனக்கு நீ அளித்த
அந்த மோதிரம் மட்டும் இன்னுமென் விரலில்...
நினைவில் நீ
நிசத்தில் அவன்
வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் நான்...

No comments:
Post a Comment