Sunday, August 2, 2009

எந்தன் உயிர்த்தோழா!!!

எங்கோ பாடப்புத்தகத்தில்
படித்த ஞாபகம்
நட்பென்றால் என்னவென்று!
நட்பு
கைமாறு கருதா கருமம் தரும்...
காலம் கடந்து நிற்கும்...
உன் குறுக்கீடு
என் வழியில் இல்லையேல்
விளக்கம் விளங்காமலே போயிருக்கும்...
ஈருடலில் ஓர் எண்ணம் - இது
நகைப்பிற்காயல்ல - என் நட்பிற்காய்...
உறவுகளுக்கும்
உனக்கும் உண்டான
மாற்றமும் புரிந்தது
மகிழ்ச்சியும் நிலைத்தது...
"அதிர்ஷ்டம்" எதை பற்றியோ
படித்தபோது நானும் நம்பவில்லை...
உன்னால்தான் அர்த்தம் பெற்றது
எந்தன் அதிர்ஷ்டம் என்ற நம்பிக்கை...
எந்தன் கைகளில் அதிர்ஷ்டம் உண்டா
எனக்கு தெரியவில்லை
எந்தன் நட்பில் முழுதும் நீதான்
எந்தன் அதிர்ஷ்டமாய்....
"சந்தோசத்திலும் கண்ணீர் வரும்" என
சொல்ல கேட்டதுண்டு...
எனக்கும் நிகழ்ந்தது
உந்தன் பதிலால் மட்டும்தான்...
உந்தன் சொற்கள்
எந்தன் கண்ணீருக்கு காரணமாய்...
தவறேயில்லை
கண்ணீரும் ஆனந்தமானது
உன்னால்தானடா...

1 comment:

  1. ஈருடலில் ஓர் எண்ணம் - இது
    நகைப்பிற்காயல்ல - என் நட்பிற்காய்...ஈருடலில் ஓர் எண்ணம் - இது
    நகைப்பிற்காயல்ல - என் நட்பிற்காய்...

    Superb...

    ReplyDelete